பிரக்ஸிட் விவகாரம் – தெரேசா மேயிற்கு கடும் நெருக்கடி!

Thursday, March 21st, 2019

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பிரக்ஸிட் உடன்படிக்கையில் திடீர் திருப்பமாக மூன்றாவது முறை வாக்கெடுப்பு நடத்த பிரித்தானிய நாடாளுமன்றம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் அந்நாட்டு பிரதமர் தெரேசா மேயிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. பிரக்ஸிட்டுக்கான கால அவகாசம் எதிர்வரும் 26ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானிய பிரதமர் தெரசா மே செய்துகொண்ட ஒப்பந்தத்தினை வாக்கெடுப்புக்கு விட்ட போது பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பிர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், புதிய ஒப்பந்தத்தினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும் ஐரோப்பிய ஒன்றியம் அதனை மறுத்து விட்டது.

இதனையடுத்து பிரக்ஸிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் பாராளுமன்றில் நிறைவேறியுள்ளது.

எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் என பிரதமர் தெரசா மே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.“

எனவே, ஒப்பந்தம் மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மூன்றாவது முறையாக வாக்கெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என பிரித்தானிய பாராளுமன்றின் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராத நிலையில் ஏற்கனவே 2 முறை பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு வாக்களிக்குமாறு அவர்களை கேட்க முடியாதென அவர் தெரிவித்துள்ளர்

Related posts: