பின்வாங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்!

Sunday, June 12th, 2016

சியர்த் நகரின் மீது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகள் தொடுத்த பதில் தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாக புதிய லிபிய அரசுடன் இணைந்து செயல்படும் படைகள் தெரிவித்துள்ளன.

ஓர் இரவிலேயே அரசப் படை சியர்த் துறைமுகத்தை கைபற்றியுள்ளது. விடியற்காலைக்கு பின்னர் அந்த துறைமுகத்தை மீட்கும் தீவிரவாதிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாக அரசப் படை தெரிவிக்கிறது.

சியர்த் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து விடுவிப்போம். லிபியாவை தூய்மைப்படுத்துவோம். எங்கள் நாட்டில் எங்களை எதிர்ப்போர் யாரையும் வெற்றி கொள்வோம் என்று படையினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசு வட்டார தகவல்கள் படி ஐ.எஸ் தீவிரவாதிகள் நகரின் நடுவில் சிக்குண்ட நிலையில் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

லிபியாவின் கடற்கரை பகுதியான சியர்த் நகரம் தீவிரவாதிகளின் பிடித்து வைத்திருந்த ஒரு பகுதியின் மையமாக ஓராண்டாக இருந்துள்ளது.

இங்கு தோல்வியடைவது என்பது அந்த அமைப்பினருக்கு மாபெரும் அடியாக இருக்குமென கருதப்படுகிறது.

160611033255_libya_640x360_reuters_nocredit

160611005928_forces_loyal_to_libyas_un-backed_unity_government_fire_from_a_tank_in_sirtes_centre_640x360_afp_nocredit

Related posts: