பிடல் காஸ்ட்ரோவின் வீரவுடல் சான்டியாகோவில் நல்லடக்கம்!

Monday, December 5th, 2016

கியூபாவின் புரட்சிகர தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் சன்டியாகோ நகரில் இருக்கும் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு வார காலமாக நடத்தப்பட்டு வந்த பேரணிகளும், அஞ்சலிகளும் முடிவுக்கு வந்துள்ளன.

கியூபா தீவின் சுதந்திர கதாநாயகன் ஜோஸ் மார்தியின் நினைவிடத்திற்கு அடுத்ததாக இருக்கும் தனியார் கல்லறைக்கு, குடும்பத்தினரும், தெரிவு செய்யப்பட்ட சில விருந்தினர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கல்லறைக்கு ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பலை சுமந்து சென்ற வாகன அணி செல்லுகின்ற வழியில் துக்கம் அனுசரிப்போர், வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். “நான் தான் ஃபிடல்” என்று மந்திரம் போல் கூறிய சிலர், தேசிய கீதத்தை பாடினர்.

இந்த தருணத்தை அடையாளப்படுத்தும் விதமாக ஹவானாவில் 21 குண்டுகள் முழங்கி இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.தனி நபர் ஆளுமை கலாசாரத்தில் கவனம் செலுத்தப்படுவதை தனது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோ ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறிய ரவுல் காஸ்ட்ரோ, தெருக்களுக்கு அல்லது பொது நினைவிடங்களுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரை சூட்டுவதற்கு தன்னுடைய அரசு தடைவிதித்திருப்பதாக கூறியிருக்கிறார்.

_92826207_c58e8ab0-4347-48fc-8f46-85683185a76a

Related posts: