பிடல் காஸ்ட்ரோவின் மறைவு:  அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத மக்கள்!

Monday, November 28th, 2016

ஹவானாவில் மக்கள் பலர் இன்னமும் பிடல் காஸ்ரோவின் மரண அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

காஸ்ட்ரோவின் வரலாற்று சிறப்புமிக்க உரைகளின் பகுதிகளை கியூபாவில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.

இன்று திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடங்க உள்ளது. மேலும், சான்டியாகோ மற்றும் தலைநகர் ஹவானாவில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற உள்ளன. அதற்காக, பொதுமக்கள் புரட்சி சதுக்கம் அருகே கூடும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து, ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்தியானது, முன்பு நடைபெற்ற போர்களில் கொரில்லா படையினர் சென்ற வழியாக எடுத்து செல்லப்பட உள்ளது. இந்த போர்கள் 1959 ஆம் ஆண்டு காஸ்ட்ரோவை ஆட்சியில் அமர காரணமாக இருந்தது.

_92684161_gettyimages-605515744

Related posts: