பிஜி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

Wednesday, January 4th, 2017

பிஜி கடற்கரையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிஜி தீவினை ஒட்டிய கடற்கரையில் 284 கி.மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மட்டுமின்றி அபாயகரமான சுமானி அலைகள் பிஜி கடற்கரையை தாக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுனாமி அலைகள் 1 மீற்றர் உயரத்தில் இருக்கலாம் எனவும் குறித்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

fffffffffffff

Related posts: