பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு!

பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
பசிபிக் கடற்பகுதியில் அமைந்த பிஜி தீவுகளில் 562 கிலோமீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று திங்கள்கிழமை அதிகாலை 2.41 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.
தெற்கு பிஜி தீவுகளை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி பிஜி தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 என பதிவாகியது. பசிபிக் கடலில் நிலநடுக்க பாதிப்பு மிகுந்த நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்திருக்கிறது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது.
Related posts:
|
|