பாலர் பாடசாலை அருகே தாய்லாந்தில் குண்டு வெடிப்பு- இருவர் பலி!
Wednesday, September 7th, 2016
தாய்லாந்தில் பாலர் பாடசாலை ஒன்றின் அருகே குண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்தின் Narathiwat பகுதியில் இன்று காலை பாலர் பாடசாலையின் முன்னால் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. இதனால் தனது மகளை அழைத்துச் சென்ற தந்தை மற்றும் சிறுமி ஆகியோரே குறித்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனா - வங்கதேசம் இடையே 20 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் கைச்சாத்து!
காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தொடர்கிறது !
உக்ரேன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!
|
|