பார்சிலோனாவில் தீவிரவாத தாக்குதல்!

Friday, August 18th, 2017

ஸ்பெயினில் இருக்கும் பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர், 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் Barcelona-வில் உள்ள Las Ramblas பகுதியின் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, சாதரணமாக அவ்வழியே சென்று கொண்டிருந்த கார், திடீரென்று பொதுமக்கள் மீது பயங்கர வேகத்தில் அதாவது 106 கி.மீற்றர் வேகத்தில் மோதியுள்ளது.வானை ஓட்டி வந்த நபர் விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.முதலில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்று பொலிசார் சந்தேகித்த நிலையில், ஐ.எஸ் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து பொலிசார் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாரும் தாங்கள் இருக்கும் பகுதியை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் தாக்குதல் நடந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை சுட்டுத் தள்ளியுள்ளதாகவும் அங்கிருக்கும் ஊடங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கர தாக்குதலின் போது அங்கிருக்கும் மக்கள் உயிருக்கு பயந்து ஓடியது மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் அங்கிருக்கும் சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தது, அதைக் கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிலர் தன்னுடன் வந்தவர்களை தேடி அலைவதும் போன்றவைகளும் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த இடம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதால், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்துள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

பிரித்தானியா நாட்டு தூதர் Simon Manley ஸ்பெயினில் இருக்கும் வெளியுறவு அலுவலக அதிகாரிகளைக் தொடர்பு கொண்டு, சம்பவம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்து வருவதாகவும், பிரித்தானியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருவதால், Simon Manley தகவல்களை கேட்டறிருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: