பார்சிலோனா பயங்கரவாதிக்கு சிறையில் கொலை மிரட்டல்!

Saturday, August 26th, 2017

பார்சிலோனா தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு மாட்ரிட் சிறையில் இருக்கும் நபருக்கு ஏனைய கைதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்சிலோனாவின் கேடலோனியா தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 28 வயதான Driss Oukabir தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் கொண்டுவரப்படுவதை அறிந்த ஏனைய கைதிகள், சிறைக்குள் அவரை அனுமதித்தால் அவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்

பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்தே Oukabir பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வாடகைக்கு எடுத்த வாகனத்தால் மோதப்பட்டே 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 130 பேர் காயமடைந்தனர். வாகனத்தை வாடகைக்கு எடுக்கும் போது நிஜமான காரணம் என்ன என்பது Oukabir தெரிந்திருக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இருப்பினும் குறித்த தாக்குதலானது மிகவும் திட்டமிடப்பட்டு இனவாதம் சார்ந்த தாக்குதல் என வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.12 பேர் கொண்ட இந்த பயங்கரவாத கும்பலானது முதலில் வெடி பொருட்களை கொண்டு மிகப்பெரும் தாக்குதல் திட்டம் ஒன்றை நிறைவெற்ற முயற்சி மேற்கொண்டிருந்தனர். ஆனால் அந்த திட்டம் எதிர்பாராத வகையில் தோல்வியில் முடியவே வாகனத்தை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: