பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு!

Sunday, August 6th, 2017

காலநிலை தொடர்பான 2015 பாரிஸ்உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க அறிவித்துள்ளது

இது தொடர்பான தமது முதலாவது எழுத்துமூலமான அறிவிப்பை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

எனினும், வொஷிங்டன் குறித்த பேச்சுவார்த்தைகளில் தொடரும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம், ஐக்கியநாடுகள் சபையின், கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதுகுறித்த உடன்படிக்கையிலிருந்து விலகும் அமெரிக்காவின் எண்ணத்தை டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜுன் மாதம் முதல் முறையாக வெளியிட்டிருந்தார்.

குறித்த உடன்படிக்கையானது அமெரிக்காவை தண்டிப்பதாகவும், மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தொழிலுக்கு சிக்கலானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதிவரை உடன்படிக்கையிலிருந்து விலகும் எண்ணத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாது என்பதால், நேற்று விடுக்கப்பட்ட அறிவிப்பு ஒரு சமிக்ஞையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: