பாரிய புழுதிப்புயல் – அச்சத்தில் பொது மக்கள்!

Friday, November 23rd, 2018

அவுஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

500 கி.மீ. பரப்புக்கு வீசியுள்ள இந்தப் புழுதிப்புயலால் சிட்னி உள்ளிட்ட பல நகரங்கள் பாதிக்கப்பட்டன. காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட்  மாதம் முதல் அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப்போக்குவரத்துபாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Related posts: