பாரவூர்திகள் மோதி கோர விபத்து – இந்தியாவில் 13 பேர் பலி!

Tuesday, May 21st, 2019

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரவூர்தி ஒன்று, சிறிய ரக பாரவூர்தி ஒன்றுடன் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பு ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று, சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்று கொண்டிருந்த சிறிய ரக பாரவூர்தியுடன் மோதியுள்ளது.

Related posts: