பாரதப் பிரதமர் மோடியை வரவேற்ற புடின் – ரஷ்ய – உக்ரெய்ன் போர் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, July 9th, 2024

இந்தியா – ரஷ்யா இடையேயான இரு நாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் எற்பட்டு செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோவின் ஒடின்ஷ்டோஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதியின் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியை வரவேற்றார்.

ரஷ்ய – உக்ரெய்ன் போரின் பின்னர் பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரெய்னுடனான போர் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன் உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய படையில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இது குறித்தும் கலந்துரைடாப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: