பாய்மரப் படகில் உலகம் சுற்றிய இந்திய பெண்கள்!

Friday, March 24th, 2017

இந்திய கடற்படையில் பணியாற்றும் பெண்களில் ஒரு குழுவினர் பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கின்றனர். இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் பெண்கள் தங்களது திறமைகளை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஏதாவது சாகசத்தை நிகழ்த்தி வருவர்.

அதே போல் இந்த ஆண்டும் கடற்படை பெண்கள் பிரிவில் ஒரு குழுவினர் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இருப்பதாகவும், மற்றொரு குழுவினர் பாய்மரப்படகு மூலம் உலகை கடல் வழியில் சுற்றி வர இருக்கின்றனர்.

6 பெண்கள் கொண்ட குழுவினர் இந்த சாகச பயணத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

வரும் ஜூன் மாதத்தில் கடற்பகுதியில் காற்று வீசுவது சீராக இருக்கும் எனவும், இந்த பயணத்தை அவர்கள் மூன்று மாதங்களில் நிறைவு செய்ய இருப்பதாகவும் கடற்படை துணை தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்தாண்டு இதேபோல உலகின் முக்கிய கடற்படை தளங்களை பாய்மரப்படகில் பெண்கள் குழுவினர் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: