பாப்பரசர் டொனால்ட் டிரம்பிடம் விடுக்கும் வேண்டுகோள்!

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒழுக்க விழுமியங்களை மதித்து செயற்படுமாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் போது பாப்பரசர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை எளியவர்களை பற்றி கருத்தில் கொண்டு செயற்படுமாறு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் டிரம்ப் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு இங்கிலாந்தில் பல பிரதேசங்களில் டிரம்ப்க்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த போராட்டத்தில் பங்குபற்றிய 217 ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வொசிங்டன் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூட்டு பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் போது ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
|
|