பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட தலைக்கவசங்கள்!

Tuesday, August 15th, 2017

பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தும்போது அதிக வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், ஆயுதம் தாங்கிய அதிகாரிகளுக்கு கெமரா பொருத்தப்பட்ட தலைக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது என பிரித்தானியாவின் பெருநகர பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையானது அதிகாரிகளுக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்கு எதிரான அதிகாரிகளின் செயற்பாடு என்பவற்றை துல்லியமாக ஆவணப்படுத்துவதாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாதுகாப்பு படையினருக்கு உடலில் பொருத்திக் கொள்ளும் வகையிலான கெமராக்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், அது தங்களது நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இல்லை என 2015ஆம் ஆண்டு விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது