பாடம் ந‌டத்துகிறது மியான்மர்: கற்றுக்கொள்ளுங்கள் !

Wednesday, September 20th, 2017

 

சமீபத்திய பர்மா (மியான்மர்) வன்முறைகளை தொடர்ந்து சமூக வலைதளங்கள் எங்கிலும் மிகக்கொடூரமான மிருகத்தனமான வன்முறை படங்கள்..!

நிறையபேர் எந்த வரலாற்று பின்னணியும் தெரியாமல் இது ஏதோ நேற்று துவங்கிய ‘முஸ்லிம்கள் மீதான வன்முறை’ என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே பதிவிடுகிறார்கள்…

உலகின் மிக நீண்ட ‘உள்நாட்டு யுத்தங்களில்’ ஒன்று பர்மா மோதல். இரண்டாம் உலக போருக்கு முன்பிருந்தே இந்த பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது.

இது… அரசியல் இனம் மதம் மொழி பொருளாதாரம் என்று மிகவும் சிக்கலான சமூக மூலக்கூறுகளின் மொத்த பிரளயம்.

நம் ஒவ்வொருவருக்கும் தம் சுயகருத்து ‍ அபிப்பிராயம் கொள்ள சுதந்திரம் இருக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தில் ஆழமான நிலைப்பாட்டை எடுக்குமுன் அதைப்பற்றி கொஞ்சம் ஆலசி ஆராய்வது நல்லது.

1946இல் இந்த நிலப்பரப்புக்கள் முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சியில் இருக்கையில் தற்போதுள்ள “ராக்கைன்” பகுதியை சார்ந்த முஸ்லிம் தலைவர்கள் சுதந்திரம் கிடைக்கும்போது தங்களை பாக்கிஸ்தானுடன் (கிழக்கு) சேர்க்குமாறு கேட்கஇ முஹம்மது அலி ஜின்ன அதை மறுத்தார். இன்றுள்ள வெறியாட்டத்தின் விதை ஜின்னாவின் இந்த முடிவால்தான் விதைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு மிர் காசிம் என்பவர் தலைமையில் முஜாகிதீன்கள் படை உருவாக்கப்பட்டு அப்போதைய பர்மிய அரசுமீது தொட‌ர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.சில தாக்குதல்கள் மிக கடுமையாக இருந்ததாகவும் அரசு தரப்பில் நிறைய உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் குறிப்புகள் காணப்படுகிறது.

மேலும்இ பல தாக்குதல்கள் நிராயுதபாணியான அரசு அலுவலர்கள்மீது நடத்தப்பட்டதால் பெருவாரியான பர்மியர்களுக்கு முஹாஜிதீன் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்பட துவங்கியது. அரசும் அதற்கு தூபமிட்டது..

1946 ல் ஒரு குழுவாக இருந்த இந்த போராட்டக்காரர்கள் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துஇ பிறழ்ந்து 1990 களில் சுமார் 12 குழுக்களாக‌ தனித்தனியாக போராட துவங்கினர். தங்களுக்குள் உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் … காட்டிக்குடுத்தல் கூட்டிக்குடுத்தல் என்று எட்டப்பன்வேலைகள் வேறு…!

அதுமட்டுமின்றி தன் ம‌தத்தை தவிற பிறரின் பிரச்சினைகளை பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. அவர்கள் வீடுகளை விட்டு துரத்தப்பட்ட போதும் துன்புறுத்தப்பட்டபோதும் கூட கண்டுகொள்ளவே இல்லை.

முடிவு..?

ஒவ்வொரு சிறு குழுவாக கருவறுத்து (அப்போதெல்லாம் இந்த அளவுக்கு சமூக வலையத்தளம் இல்லாததால் பலருக்கும் தெரியவில்லை) இன்று அந்த இனமே அழிவின் விளிம்பில் நின்றுகொண்டு மரணஓலமிடுகிறது..!

தோழர்களே… இதிலிருந்தேனும் பாடம் படியுங்கள்…!

இத்தாலியிலும் ஸ்பெயினிலும் படிக்காத பாடத்தை..

மங்கோலியாவில் படிக்காத பாடத்தை…

செர்பியாவில் படிக்காத பாடத்தை…

சீனாவிலும் பல்கேரியாவிலும் உகோஸ்லாவியாவிலும் படிக்காததை…

இலங்கையில் படிக்காத பாடத்தை… இப்போது…; மியான்மர் உங்களுக்கு பாடம் ந‌டத்துகிறது.

நீங்கள் இங்கும் கற்கத்தவறினால்… நாளை நீங்களும் இதேபோல் மரண ஓலம் இட நேரிடலாம்..!

ஓற்றுமையோடு பொதுஎதிரி யார் என்ற தெளிவோடு செயல்படுங்கள்..! உங்கள் சில்லறை கருத்துமோதல்களுக்காகவும் ஈகோ காரணமாகவும் பிரிந்து உங்களுக்குள் அடித்துக்கொண்டிருந்தால்… விரைவில் நீங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவீர்கள். இது முஸ்லிம்க‌ளுக்கு ம‌ட்டுமான‌ பாட‌ம‌ல்ல‌.

நம் அனைவருக்குமான பாடம்

கனத்த இதயத்துடன்..

Related posts: