பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

Thursday, March 14th, 2019

நைஜீரியாவின் லகூஸ் நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இதன்போது கிட்டத்தட்ட 40 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டட இடிபாடுகளுக்குள் பெருமளவான சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.