பாக். பிரதமர் அதிரடி – அதிர்ச்சியில் உயரதிகாரிகள் !
Monday, August 27th, 2018பாகிஸ்தானின் பிரதமர், ஜனாதிபதி உட்பட உயர் அதிகாரிகள் வானூர்திகளில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கு, பாகிஸ்தானின் பிரதமராக தெரிவாகியுள்ள இம்ரான் கானின் அமைச்சரவை தடை விதித்துள்ளது.
வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணத்துக்கு விசேட வானூர்திகளை பயன்படுத்த போவதில்லை என பிரதமர் இம்ரான்கான் ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 25ஆம் திகதி இம்ரான் கான் பிரதமராக தெரிவானதன் பின்னர், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆடம்பரமான பிரதமர் வாசஸ்தலத்தில் தங்க மறுத்துள்ள அவர், அங்குள்ள 33 குண்டு துழைக்காத வாகனங்களை பயன்படுத்த போவதில்லை என தெரிவித்து, அவற்றில் இரண்டு வாகனங்களை மட்டுமே தமது பாவனைக்காக பயன்படுத்த போவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாசஸ்தலத்திற்கு பதிலாக குறைந்த வசதிகளை கொண்ட இராணுவ செயலாளரின் 3 படுக்கை அறை வசதிகள் உள்ள வீட்டிலேயே தங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது வீட்டிற்கு இரண்டு பணியாளர்களை மட்டுமே பணியில் அமர்த்தவுள்ளதாகவும், ஆளுநர் மாளிகை மற்றும் அரச உயர் அதிகாரிகளின் வீடுகளில் மேற்கொள்ளப்படும் ஆடம்பர செலவுகள் நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
மக்கள் வரிப்பணம் வீணாவதாக தெரிவித்த இம்ரான் கான், சிக்கன நடவடிக்கைகளாக இவை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|