பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியின் கடவுச்சீட்டை தடை செய்ய உத்தரவு!

Sunday, March 18th, 2018

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபின் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரது கடவுச்சீட்டை தடை செய்து அடையாளஅட்டையையும் ரத்துச்செய்யுமாறு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச காவற்துறையின் உதவி மூலம் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னாள் ஜனாதிபதி முஷாரப் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நிலையில் வழக்கு விசாரணைக்காக அவரை பாகிஸ்தானுக்கு நாடுகடத்துமாறு நீதிமன்றம்கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: