பாகிஸ்தான் நீர்மூழ்கி ஏவுகணை சோதனை!

coltkn-01-11-fr-03151753467_5150535_10012017_MSS Wednesday, January 11th, 2017

நீர்மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தக்கூடிய அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணையை பாகிஸ்தான் முதல் முறை வெற்றிகரமாக சோதித்துள்ளது என்று பாகிஸ்தான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

450 கிலோமீற்றர் தாவக்கூடிய பாபுர் – 3 ஏவுகணை ஆணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடியது என்று பாகிஸ்தான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை பாகிஸ்தான் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சுய வல்லமையை காட்டுவதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷரீப் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த முன்னேற்றம் அண்டை நாடான இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்கும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

1947 ஆம் ஆண்டு பிரிட்டனிடம் சுதந்திரம் பெற்ற பின்னர் இரு நாடுகளும் மூன்று யுத்தங்களில் ஈடுபட்டுள்ளன. 1998இல் இரு நாடுகளும் அணு ஆயுத திறனை பெற்றது தொடக்கம் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றன.

இந்தியா ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணை சோதனை மேற்கொண்டதோடு 2013இல் அது நீர்மூழ்கி கப்பல் மூலம் க்ரூஸ் ஏவுகணையை ஏவியது.

coltkn-01-11-fr-03151753467_5150535_10012017_MSS


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!