பாகிஸ்தான் தொடர்பான தெளிவான செய்தி வெளிப்படும் – மியன்டட்!
Thursday, October 26th, 2017லாகூரில் இன்று நடைபெறும் இலங்கை அணி பங்கேற்கும் 20க்கு 20 கிரிக்கட் போட்டியினூடாக பயங்கரவாத அழுத்தத்தில் இருந்து பாகிஸ்தான் விடுப்பட்டுள்ளது என்ற தெளிவான செய்தி வெளிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஜாவிட் மியன்டாட் இதனை தெரிவித்துள்ளார். இரண்டு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் இரண்டு போட்டிகள் இன்றும் நாளையும் அபுதாபியில் இடம்பெறவுள்ளது.
மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் சர்வதேச அணிகளை பாகிஸ்தானில் வந்து விளையாடுமாறு ஜாவிட் மியன்டாட் அழைப்பு விடுத்துள்ளார்.பாகிஸ்தான், பாதுகாப்பானதும் விளையாட்டை நேசிக்கும் நாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி!
ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!
அமெரிக்காவில் கொவிட் உயிரிழப்பு 1 மில்லியனை எட்டியது - அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு!
|
|