பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் பலி!

Saturday, September 17th, 2016

பாகிஸ்தானின் ஆப்கான் எல்லைப்  பகுதிக்கிராமமான பாயிகானில் உள்ள பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாகுதலில் 25 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாராந்த பிரார்த்தனைக்காக வெள்ளிக்கிழமை அதிகமான மக்கள் கூடியிருந்த வேளையை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தபபட்டதாகவும் தற்கொலைக்குண்டுதாரி வெடித்துச்சிதறியதில் மசூதி கட்டிடமும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளே  இந்த தாக்குதலை நடத்தியருக்கலாம் என்று கருதப்படுகின்ற போதிலும் எந்தவொரு அமைப்பும் தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை.

_91225418_483e2929-d3c2-498a-bac9-9deebfca3a47

Pakistan_mosque_attack_picture_CI

Related posts: