பாகிஸ்தான் இராணுவ தளபதி ஷெரிப் நவம்பரில் ஒய்வு!
Thursday, November 24th, 2016
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் வரும் நவம்பர் 29 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையில் அடுத்த இராணுவ தளபதி யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் பலம்மிக்க பதவியான இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை ஷெரிப் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். முதல்முறையாக தற்போதைய இராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரிப் 3 ஆண்டு பதவிக் காலம் நிறைவடைந்து வரும் 29ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.
எனினும் அவர் நாட்டில் தொடர்ந்து பிரபலம் கொண்டவராக இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து நாடெங்கும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. குற்றங்கள், ஊழல், தீவிரவாத வன்செயல்கள் ஆகியவற்றுக்கு எதிரான அரணாக அவரை மக்கள் பார்க்கின்றனர்.
இதேவேளை, பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை தளபதி என்ற சக்திவாய்ந்த பதவியை கைபற்றுவதில் லெப்டினன்ட் ஜெனரல்கள் ஜாவேத் இக்பால் ராம்தே, சுபையர் ஹயாத், இஷ்பாக் நதீம் அகமத், குவாமர் ஜாவேத் பாஜ்வா ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில், ஜாவேத் இக்பால் தலிபான்களின் அட்டகாசத்தை ஒடுக்குவதில் தன் இராணுவ ஆளுமையை நிரூபித்துள்ளார். எனவே, அவரே தலைமை தளபதிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இராணுவம் அந்நாட்டு அரசியலில் முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது. 1947 சுதந்திரத்திற்கு பின்னர் அங்கு இதுவரை மூன்று இராணுவ சதிப்புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் இராணுவத் தளபதி பிரதமருக்கு மேலால் நாட்டில் பலம்மிக்கவராக கருதப்படுகிறார்.
Related posts:
|
|