பாகிஸ்தான் இராணுவத்தை வெல்லமுடியாது – ரஹீல் செரீப்!

Wednesday, September 7th, 2016

பாகிஸ்தான் இராணுவத்தை வெல்ல முடியாது என்பதை எதிரிகளுக்கு சொல்ல விரும்புவதாக அந்நாட்டுஈராணுவ தளபதி ரஹீல் செரீப் தெரிவித்துள்ளர்.

பாகிஸ்தான் பாதுகாப்பு தினத்தையொட்டி ராவல்பிண்டியில் உள்ள அந்நாட்டு இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரஹீல் செரீப், காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தான் இராஜதந்திர ரீதியில் உதவிசெய்வதை தொடரும் என்று கூறிஉள்ளார். “காஷ்மீரில் தங்களுடைய உரிமைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு என்பது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதே. காஷ்மீருக்கு பாகிஸ்தானின் இராஜதந்திர ரீதியில் உதவியை தொடரும்,” என்று ரஹீல் செரீப் கூறிஉள்ளார்.

காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்துப் பகுதியை போன்றது என்று கூறிய ரஹீல் செரீப், “எண்ணற்ற தியாகங்களை” செய்யும் பள்ளத்தாக்கு பகுதி மக்களுக்கு பாராட்டை தெரிவிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.  மேலும் ஒருபடி சென்று ”பாகிஸ்தான் இராணுவத்தை யாராலும் வெல்லமுடியாது,” என்று கூறிஉள்ளார்.

”எதிரிகளுக்கு நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்கனவே வலுவாக இருந்தது, இப்போது வெல்ல முடியாத அளவிற்கு வலிமையாகிஉள்ளது,” என்று கூறிஉள்ளார். பாகிஸ்தான் எதிரிகளின் இரகசியங்கள், வெளிப்படையான சூழ்ச்சிகள், நோக்கங்களை நாங்கள் அறிவோம் என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். சவாலானது இராணுவம் அல்லது இராஜதந்திர ரீதியில் இருக்கும், எல்லைப் பகுதியில் அல்லது நகருக்கு உள்ளே இருக்கும், எங்களுக்கு எங்களுடைய நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று நன்றாகவே தெரியும் என்று கூறிஉள்ளார்.

இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும், சீனா-பாகிஸ்தான் இடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 3 ஆயிரம் கி.மீ. தொலைவில், 46 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி) மதிப்பில் ‘சி.பி.இ.சி.’ என்னும் பொருளாதார சாலை அமைக்கும் திட்டத்தை சீனா முன்னெடுத்து வருகிறது. இதனை குறிப்பிட்ட ரஹீல் செரீப், உறவிற்கு சி.பி.இ.சி. திட்டமே தலையாய ஆதாரங்களாகும். இந்த திட்டத்திற்கு வெளிநாட்டு சக்திகள் தடையை ஏற்படுத்த விடமாட்டோம். இதுபோன்ற முயற்சிகள் இரும்பு கரம்கொண்டு அடக்கப்படும் என்று கூறிஉள்ளார்.

asdas1 copy

Related posts: