பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க அமெரிக்கா ஆதரவளிக்காது!

Friday, October 7th, 2016

ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 19 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே பதான்கோட் தாக்குதலின் வடுக்கள் மறையாத நிலையில், இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியது. மேலும், இதுதொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் இதை திட்டவட்டமாக மறுத்தது.

உரி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவதற்கு ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவித்து, தனிமைப்படுத்த வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. ஆனால் இதற்கு தற்போது அமெரிக்க மறுப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, கூறியதாவது-

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தராது. ஆனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ள மறைவிட முகாம்களை அழிக்க அந்த நாடுடன் இணைந்து செயல்படுவோம்.காஷ்மீர் பிரச்சினை உள்பட பல பிரச்சினைகள் குறித்து பேச  இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையே ஒரு “அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. பாகிஸ்தான் தங்கள் அணு ஆயுதங்களை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பாக வைத்து உள்ளது. என கூறினார்.

620109883Usa

Related posts: