பாகிஸ்தானுக்கு புதிய அமெரிக்க தூதர்!

Thursday, July 12th, 2018

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரான டேவிட் ஹேலேயை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டேவிட் ஹேலேவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி வழங்க அவர் தீர்மானித்து இருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத்துறையில் துறைக்கான மந்திரி, செயலாளர் பதவிக்கு அடுத்த மூன்றாவது உயர் பதவி இந்தப் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதவியில் இருந்து வந்த தாமஸ் ஷானோன் கடந்த மாதம் 4 ஆம் திகதி ஓய்வு பெற்று விட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டேவிட் ஹேலே, வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி ஏற்பதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
டேவிட் ஹேலே, 2015ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் அமெரிக்க தூதர் பதவி வகித்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு இவர் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். இவர் லெபனான் நாட்டிலும் அமெரிக்க தூதர் பதவி வகித்து இருக்கிறார்.

Related posts: