பாகிஸ்தானுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!

Tuesday, June 18th, 2019

பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23,000 கோடி கடன் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், நிதி நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,800 கோடி) கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்துக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: