பாகிஸ்தானில் 100 பேர் உடல்கருகி பலி!

Sunday, June 25th, 2017

பாகிஸ்தானில் இன்று காலை எரிபொருள் போக்குவரத்து பாரவூர்தி ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் எரிபொருள் அள்ளச்சென்ற 100 பேர் உடல்கருகி பலியாகினர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகரில் இன்று காலை எரிபொருள் போக்குவரத்து பாரவூர்தி சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதனால், பாரவூர்தியிலிருந்த எரிபொருள் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது.இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் கையில் வாளிகளுடன் எரிபொருள் அள்ள பாரவூர்தியை முற்றுகையிட்டனர் 100-க்கும் அதிகமானோர் பாரவூர்தியிலிருந்து சிந்திய எண்ணெயை அள்ளிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக பாரவூர்தி தீப்பிடித்து எரிந்தது இதனால், பாரவூர்தியைச் சுற்றியிருந்த 100 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகியுள்னர் 75 பேர் தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து நடந்த இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளதாகவும், தீ விபத்தின் போது பாரவூர்தியின் அருகே இருந்த 6 சிற்றூந்துகள் மற்றும் 12 உந்துருளிகள்  நாசமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: