பாகிஸ்தானில் மோதல் – பலர் பலி!

Tuesday, October 24th, 2017

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 8 பேர் பலியானர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள  ராயீஸ் கோத் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.அன்சருல் ஷரியா பாகிஸ்தான் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் தலைமறைவாக இருக்குமிடம் தொடர்பில் பாகிஸ்தானின் இராணுவத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த தாக்குதலின்போது 5 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே மரணித்ததுடன் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: