பாகிஸ்தானில் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்!

Monday, May 28th, 2018

பாகிஸ்தானில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது அந்த நாட்டு அரசாங்கம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் – பல்டிஸ்தான் பிராந்தியத்தை தனி சுயாட்சி மற்றும் அதிகாரம் கொண்ட பகுதியாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ஏனைய பகுதிகளைப் போன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் – பல்டிஸ்தான் பகுதிகளுக்கு மேலதிக அதிகாரம் மற்றும் நிதி உதவிகளை வழங்குமாறுபிரதமர் அப்பாஸி அண்மையில் பணித்திருந்தார்.

இந்த பகுதியின் உள்ளூராட்சி அதிகாரங்களை பறிக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக கில்ஜித் – பல்டிஸ்தான் பிராந்தியத்தில்போராட்டங்கள் நடத்தப்படுகின்றது.

இதனிடையே மக்களால் நடத்தப்பட்ட பேரணியொன்றின் மீது பாகிஸ்தானிய காவல்துறையினரால், கண்ணீர்புகை மற்றும் தடியடி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிகமாகஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: