பாகிஸ்தானில் பேருந்து, டீசல் லொரி நேருக்கு நேர் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு!
Tuesday, January 22nd, 2019பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் பேருந்து ஒன்றின் மீது டீசல் லொரி மோதி தீப்பிடித்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ளனர். பலூசிஸ்தானின் தொழில் நகரமான ஹப் அருகே சென்றபோது, எரிபொருள் ஏற்றி வந்த லொரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் இதுவரை 26 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் லாஸ்பேலா துணை ஆணையாளர் ஷபீர் மெங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்ய தூதுவர் படுகொலைக்கு இலங்கை கண்டனம்!
ஊடகமே அமெரிக்கர்களின் எதிரி சொல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
|
|