பாகிஸ்தானில் புதிய பிரதமர் தெரிவு!

பாகிஸ்தானின் புதிய பிரதமரை தெரிவு செய்யவதற்காக, அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது.
இதன்போது பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தானின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே கடந்த மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தலில், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 116 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் இம்ரான் கானினால் அமைக்கப்பட்ட கூட்டணியில் 158 பேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் இடம்பெறும் வாக்கெடுப்பில் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
ரஷ்யாவின் வான் படை தாக்குதலில் 66 பேர் உயிரிழப்பு!
கலிபோர்னியா மாநிலத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை!
பாகிஸ்தானின் ஏவுகணை போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!
|
|