பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் – எச்சரிக்கிறது ஈரான்!

தீவிரவாதிகளை அடக்காவிட்டால் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஈரானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினார்கள். பாகிஸ்தானுக்குள் இருந்து கொண்டே துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் ஈரான் இராணுவ வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஸ்-அல்- அடில் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
தீவிரவாதிகள் கொள்ளைக்காரர்கள். கோழைத் தனமான தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்களை ஒழிக்க வேண்டும் என்று ஈரான் இராணுவ தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பக்ரி தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லைப்பகுதி தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. அங்கு அவர்கள் முகாம்கள் அமைத்து பயிற்சி பெறுகிறார்கள்.
இதை ஈரான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இந்த நிலை மேலும் தொடரக் கூடாது. பாகிஸ்தான் அதிகாரிகள், தீவிரவாதிகள் எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களை கைது செய்து பயிற்சி முகாம்களை மூட வேண்டும். இல்லாவிடில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை நசுக்குவோம். அழித்து ஒழிப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.
Related posts:
|
|