பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு – 16 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் உள்ள சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த பல கடைகள், கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளதுடன், சந்தையில், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தகவல் அறிந்ததும் ராணுவத்தினரும், பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அஸாமில் தீவிரவாதிகள் கொடூரம் : 14 பேர் பலி!
ஐ.எஸ் அமைப்பை விரட்ட துருக்கியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்!
அமெரிக்க குடிவரவு குடியகல்வு கொள்கையில் மாற்றம்!
|
|