பாகிஸ்தானில் பாரிய குண்டுவெடிப்பு – 25 பேர் உடல் சிதறி பலி!

Saturday, November 24th, 2018

வடமேற்கு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்மீக பண்டிகை ஒன்றிற்காக கூடியிருந்த மக்களை குறிவைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கராச்சியில் உள்ள சீன உதவி தூதுவர் ஆலயத்திற்குள் 3 ஆயுததாரிகள் நுழைய முற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின்போது இடம்பெற்ற எதிர்த் துப்பாக்கி பிரயோகத்தில் 3 ஆயுததாரிகள் கொல்லப்பட்டதுடன், 2 காவல்துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி தாக்குதலுக்கு பலோச்சிஸ்ரான் விடுதலை இராணுவம் என்ற ஆயுத குழு உரிமை கோரியுள்ளது.

ஆரம்ப விசாரணைகள் மூலம் இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் இடையே தொடர்பு எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

Related posts: