பாகிஸ்தானில் பலத்த நில நடுக்கம் – 20 பேர் பலி: 200க்கும் மேற்பட்டோர் காயம்!

Thursday, October 7th, 2021

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கிலோமீற்றர் தொலைவில் இன்று  அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது எனத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கத்தால் சுமா 200 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் உத்தியோகப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: