பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை விடுதலை!

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இந்திய மீனவர்கள் அடுத்தவாரம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 385 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் இந்தியாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், நாளை 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவிக்க உள்ளதாக இரு நாடுகளினதும் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 385 இந்திய மீனவர்களும் இந்த மாதத்திற்குள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளனர் என்றும், அவர்களுள் இறுதி தரப்பினர் எதிர்வரும் 29ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
எச்சரிக்கை ! கள்ள நோட்டுகள் புழக்கம் !!
கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!
அல்ஜசீராவின் ஊடகபணிகளை தடை செய்தது இஸ்ரேல் - சோதனை நடவடிக்கைகளையும் மன்னெடுத்துள்ளதாக தெரிவிப்பு!
|
|