பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் காலமானார்!
Sunday, February 5th, 2023பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தனது 79 ஆவது வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் இதனை உறுதிப்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பர்வேஸ் முஷாரப் 1943 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இந்தியாவின் டெல்லியில் பிறந்தார். அவர் ஏப்ரல் 19, 1961 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டதுடன், பாகிஸ்தானின் இராணுவ படைகளின் பிரதானியாகவும் பொறுப்பேற்றார்.
1999 இல் இரத்தமில்லாத சதி மூலம், நவாஸ் ஷெரீப்பை வீழ்த்திய, பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். பின்னர் அவர் 2001 ஜூனில் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அவர் 2008 ஆம் ஆண்டு பதவி விலகிய நிலையில் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இந்த நிலையில், நீண்டநாள் சுகயீனமுற்றிருந்த முஷாரஃப் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (5) காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|