பாகிஸ்தானின் பிரதமராவது தான் லட்சியம் – மலாலா !

Friday, October 21st, 2016

பாகிஸ்தான் நாட்டிற்கு பிரதமராக பதவியேற்று பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது தான் தனது லட்சியம் என மலாலா யூசப்சாய் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் பெற்றார்.

2012ம் ஆண்டு சிறுமிகளின் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக அவரை தீவிரவாதிகள் சுட்டதை தொடர்ந்து உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஷார்ஜா நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மலாலா பங்கேற்றுள்ளார்

அப்போது, ‘பாகிஸ்தான் நாட்டிற்கு பிரதமர் ஆவது தான் எனது லட்சியம்.பெனாசிர் பூட்டோ எப்படி இரண்டு முறை பிரதமர் பதவி வகித்து பெண்களுக்கு நன்மை செய்தாரோ, அவரை போன்று நானும் சிறுமிகள் மற்றும் பெண்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன்.

இதுமட்டுமல்லாமல், உலகளவில் சிறுமிகள் மற்றும் பெண்கள் எதிர்க்கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்ப்பதில் முழு கவனத்தை செலுத்துவேன்’ என மலாலா பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

i am malala