பாகிஸ்தானின் நட்சத்திர ஹோட்டலில் குண்டு வெடிப்பு ; நால்வர் பலி, 12 பேர் காயம்!

Thursday, April 22nd, 2021

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பாரிய வெடிப்பில் ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளில், வெடிக்கும் சாதனம் ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்ததாக பிரதிப் பொலிஸ்மா அதிபர்; தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் அனர்த்தத்தில் 10 கார்கள் தீக்கிரையானதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
குறித்த ஹொட்டலில் பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் நோங் ரோங் செரீனா கலந்து கொண்ட நிலையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் அவர் வெடிப்பு இடம்பெற்ற நேரம் ஹொட்டலில் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த குண்டு தாக்குதல் சீனத்தூதுவரை இலக்கு வைக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: