பாகிஸ்தானின் செயலுக்கு அருண் ஜெட்லி கண்டனம்!

Wednesday, May 3rd, 2017

இந்திய இராணுவ வீரர்களின் உடல்களை சிதைத்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தினரின் செயற்பாட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்  வீரர்களின் சடலங்கள் சிதைக்கப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாகிஸ்தானின் இந்த செயற்பாட்டை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள் போர்க் காலத்தில்கூட நடைபெற்றது இல்லை. இத்தாக்குதலானது கண்டிக்கத்தக்க மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும் என்று கூறியுள்ளார்.

அத்தோடு இந்திய வீரர்களின் உயிர்த் தியாகத்தை இந்தியா வீண்போக விடாது என்ற அவர் பாகிஸ்தான் படையினரின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்திய பாதுகாப்புப் படை தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: