பவுண்ட்டின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Tuesday, January 17th, 2017

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிட் உரையினால் நேற்றைய தினம் $1.20 வரை பவுண்ட் பெறுமதி சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையில் டொலருக்கு ஒப்பிடகையில் ஸ்டெர்லிங் பவுன்ஸ் பாரிய வீழ்ச்சியை சந்தித்து பின்னர் உரிய நிலைக்கு திரும்பியுள்ளது.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தையில் இருந்து வெளியேறுவதற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளமை குறித்து வெளியாகியுள்ள அறிக்கைகளுக்கு வர்த்தகர்கள் எதிர்மறையாக செயற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1985ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போது பவுண்ட், டொலருக்கு எதிராக சுமார் 20 வீதம் வீழச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமையன்று பவுண்டு, யூரோவுக்கு எதிராகவும் 1 வீதத்திற்கு அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரித்தானிய வர்த்தகத்திற்கு பவுண்ட் பெறுமதி வீழ்ச்சியடைவது சிறப்பான விடயம் என அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

arton17903

Related posts: