பழைய 500 ரூபாய்க்கு சற்றுச் சலுகை!

Friday, November 25th, 2016

இன்று முதல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது. அரசு விலக்கு அளித்துள்ள சில பொதுச் சேவைகளுக்கு பழைய 500 ரூபாயை பயன்படுத்தலாம். ஆயிரம் ரூபாய்க்கு அந்த சலுகையும் இல்லை.

செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது, இன்று முதல் நிறுத்தப்பட்டது. இனிமேல், மக்கள் வங்கிக் கணக்குகளில் மட்டும் அந்த ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மட்டுமன்றி, தபால் அலுவலகங்கள் உள்பட எங்கும் இனி மாற்ற முடியாது.

பிரதமர் கடந்த 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டபோது, டிசம்பர் 30-ஆம் தேதி வரை மக்கள் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கு பழைய 500 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தலாம். ஆனால். ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய மட்டுமே முடியும்.

பணத்தை மாற்றுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பணம் வைத்திருப்போர், இன்னும் வங்கிக் கணக்கே துவக்காதவர்கள் வங்கிக் கணக்குத் துவக்கி அதில் டெபாசிட் செய்வதை ஊக்குவிக்கவும் இந்த முடிவு என குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கு துவக்கவும், பழைய நோட்டுக்களை மாற்ற வருவோர் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்யவும் வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசு மற்றும் ஊராட்சிப் பள்ளிகளுக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் வரையும், அரசுக் கல்லூரிகள் கட்டணம், பிரீபெய்டு மொபைல் கட்டணம் 500 ரூபாய் வரையும், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் 500 ரூபாய் வரை வாங்கப்படும் பொருட்கள் ஆகியவற்றுக்கும் 500 ரூபாய் நோட்டுக்களாக செலுத்தலாம்.

குடிநீர் மற்றும் மின் கட்டணங்களையும் செலுத்தலாம்.

நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளில் டிசம்பர் 2-ஆம் தேதி வரை கட்டணமின்றி செல்லலாம். 3-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, கட்டணம் செலுத்த பழைய 500 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகள், வாரத்துக்கு 5000 ரூபாய் அளவுக்கு வெளிநாட்டுக் கரன்ஸிகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

_92649410_35b3aa3c-ff59-4a13-a7c5-3799c271ce38

Related posts: