பள்ளிவாசல் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்.

ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள முக்கிய பள்ளிவாசலான அல் நூரியை, ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிவைத்து வீழ்த்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஈராக்கிய படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ஐ.எஸ்.தீவிரவாதிகள் மறுத்துள்ளனர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் வான்படையினர் நடத்திய தாக்குதலிலேயே இந்த பள்ளிவாசல் வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும். இந்த பள்ளிவாசல் வீழ்த்தப்பட்டமையானது, ஐ.எஸ். தீவிரவாதிகளின் தோல்வி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதாக, ஈராக்கின் பிரதமர் ஹைட அல் அபாடி தெரிவித்துள்ளார்
இந்த குற்றச்செயலை ஐ.எஸ். தீவிரவாதிகள் புரியும் போது, தாங்கள் குறித்த பள்ளிவாசலில் இருந்து சில மீற்றர்களுக்கு அருகிலேயே இருந்ததாக ஈராக்கிய படையினர் கூறியுள்ளனர்
Related posts:
பல்கேரியப் பிரதமர் இராஜினாமா!
சிரிய இராணுவத்திற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை தவிர்த்தது ரஷ்யா!
லிபிய கடற்பகுதியில் தத்தளித்த சுமார் 970 அகதிகள் மீட்பு!
|
|