பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து :  பெருவில் 36 பேர் பலி?

Thursday, January 4th, 2018

பெரு நாட்டின் தலைநகர் லீமா அருகே சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து ஒன்று 57 பயணிகளுடன் பசமாயோ நகரில் இருந்து லீமா நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆபத்தான வளைவு ஒன்றின் எதிரே வந்த லொறி மீது மோதியது. இந்த விபத்தில் சுரித்த பேருந்து சாலையை ஒட்டி இருந்த சுமார் 100 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

பள்ளத்தில் இருந்து மக்களை மீட்பது கடினமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடைமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Related posts: