பலஸ்தீன போராளிகளின் உடலை கொடுப்பதை நிறுத்தியது இஸ்ரேல்!

Tuesday, January 3rd, 2017

பலஸ்தீன போராளிகளின் உடலை அவர்களது குடும்பத்தினரிடம் கொடுப்பதற்கு பதிலாக அவைகளை அடக்கம் செய்யப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பலஸ்தீன நிலப்பகுதியில் இருக்கும் இஸ்ரேலியர்களின் எச்சங்களை திரும்பப்பெறுவதை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இஸ்ரேலிய கொள்கையில் ஏற்பட்டிருக்கும் நிரந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது.

எனினும் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு, கேலி செய்யும் வீடியோக்களை வெளியிட்ட பின்னரே இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2014 காசா யுத்தத்தின்போது கொல்லப்பட்டதாக குறிப்பிடும் இஸ்ரேலிய வீரர் ஒரோ ஷோலின் கேலி செய்யும் பிறந்த நாள் வீடியோ ஒன்றை ஹமாஸ் வெளியிட்டிருந்தது.

ஷோலின் மரணத்தை ஹமாஸ் இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அடக்கம் செய்யப்படும் உடல்கள் பின்னர் பரிமாற்ற நடவடிக்கையின் கீழ் தோண்டி எடுக்கப்பட்டு திரும்ப அளிக்கப்படவுள்ளது.

பரிமாற்ற நடவடிக்கையில் பலஸ்தீன கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களை திரும்ப அளிக்கும் கோரிக்கையை கடந்த 2016 செப்டெம்பரில் ஹமாஸ் நிராகரித்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

coltkn-01-03-fr-03145420588_5117185_02012017_MSS_GRY

Related posts: