பரிஸில் பாரிய வெடிப்பு!

Saturday, April 2nd, 2016

பிரான்ஸின் தலைநகர் பரிஸில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிஸ் நகரம் புகைமண்டலத்தால் சூழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு நேரப்படி நேற்று (1) பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக செய்தி தெரிவிக்கின்றன..

இந்த வெடிப்பு சம்பவத்தில் 5பேர் காயமடைந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

பாரிஸ் நகரத்துக்கு செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த வெடிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: