பயணிகள் விமானம் விழுந்து விபத்து  –  ஈரானில் 66 பேர் உயிரிழப்பு!

Monday, February 19th, 2018

ஈரான் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு நேற்று(18) காலை சென்ற பயணிகள் விமானம்  விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ATR-72 என்ற குறித்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் புறப்பட்டு, ஈரானின் இஸ்பாஹன் மாநிலத்தில் உள்ள செமிரோம் மலைப்பகுதிக்குள் சென்றபோது, ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு பகுதியில் உள்ள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளனதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் இருந்த 66 பேரும் உயிரிழந்துள்ளதாக ஈரான் அஸீமான் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts: