பயணிகள் விமானம் கோர விபத்து – 157 பேர் பலி!

எதியோப்பியன் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில், 149 பயணிகள், விமானிகள் உட்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அட்டிஸ் அபாபா (Addis Ababa) நகரில் இருந்து நைரோபி (Nairobi) நோக்கி பயணித்த போயிங் 737 விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து நேரிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடாமல் நிறுத்தி வைப்பு!
மத்திய இத்தாலியில் மீண்டு புவிநடுக்கம்!
இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா - இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்க...
|
|